ADDED : ஆக 22, 2011 11:24 PM
உடுமலை : உடுமலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி., செந்தில் தலைமை வகித்தார். கூட்டத்தில்,' விநாயகர் சதுர்த்தியையொட்டி பலத்த பாதுகாப்பு வசதி, போதுமான குடிநீர் வசதி, சுகாதாரம் உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில், விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யும் வாய்க்கால் பராமரிப்பதுடன், 2 நாட்களுக்கு முன்பே தண்ணீர் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது. மின் தடையின்றி வழங்கவும்; விசர்ஜனம் செய்யும் இடத்தில் போதுமான மின்வசதிகளும் மேம்படுத்த வேண்டும். மருத்துவமனையில், எந்நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு டாக்டர் இருப்பதுடன், ஆம்புலன்ஸில் டாக்டர் கொண்ட குழுவினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். தீயணைப்புத்துறை சார்பில், தீயணைப்பு வாகனம் தயாராக வைத்திருக்க வேண்டும்; போக்குவரத்து போலீசார் 'டிராபிக்' பிரச்னை ஏற்படாமல் முறையாக கண்காணிப்பு பணியினை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதில், நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.


