/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நெசவாளர் ஓய்வூதியத்தை உயர்த்திட செங்குந்த மகாஜன சங்கம் கோரிக்கைநெசவாளர் ஓய்வூதியத்தை உயர்த்திட செங்குந்த மகாஜன சங்கம் கோரிக்கை
நெசவாளர் ஓய்வூதியத்தை உயர்த்திட செங்குந்த மகாஜன சங்கம் கோரிக்கை
நெசவாளர் ஓய்வூதியத்தை உயர்த்திட செங்குந்த மகாஜன சங்கம் கோரிக்கை
நெசவாளர் ஓய்வூதியத்தை உயர்த்திட செங்குந்த மகாஜன சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 09, 2011 02:44 AM
விழுப்புரம் : நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க தென்னிந் திய செங்குந்த மகாஜன சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முப்பெரும் விழா விழுப்புரம் ஆசான் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மாணிக்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் பழனி, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் முன்னிலை வகித்தனர். மாவட்ட செங்குந்தர் இளைஞரணி செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். கருணாநிதி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.கடந்தாண்டு எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செங்குந்தர் மாணவர்களுக்கு மாநில தலைவர் ராஜவேலு, பொதுச் செயலா ளர் செல்வராஜ், துணை பொதுச் செயலாளர் விஜயபாரதி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.தமிழக அரசால் வழங்கப்படும் நெசவாளர் ஓய்வூதியத்தை 400 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். செங்குந்தர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் விஸ்வநாதன், செல்வராஜ், வசந்தா சுத்தானந்தம், கண்ணன், சிவசண்முகம், கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


