Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முடங்கியது பாலம் கட்டும் பணி :நிதி ஒதுக்கியும் பிரச்னை

முடங்கியது பாலம் கட்டும் பணி :நிதி ஒதுக்கியும் பிரச்னை

முடங்கியது பாலம் கட்டும் பணி :நிதி ஒதுக்கியும் பிரச்னை

முடங்கியது பாலம் கட்டும் பணி :நிதி ஒதுக்கியும் பிரச்னை

ADDED : ஆக 03, 2011 11:02 PM


Google News
பேரூர் : நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டும் பாலம் கட்டும் பணி பாதியிலே முடங்கிப்போனது; இதனால் மேட்டுக்காடு கிராமமக்கள் அதிருப்தியைடந்துள் ளனர்.

வீரகேரளம் பேரூராட்சி, சுண்டப்பாளையம் அருகே மேட்டுக்காடு கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேட்டுக்காடு செல்லும் வழியில், மழைக் காலங்களில் பள்ளவாரியில் பெருக்கெடுக்கும் தண்ணீரால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்றுவர முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இங்கு, பாலம் அமைத்து தரக்கோரி, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, கோவை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 11 லட்சம், பேரூராட்சி பொதுநிதி 9 லட்சம் உள்பட மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பாலம் அமைக்க, பள்ளவாரி பகுதியின் மையப்பகுதி மற்றும் ஓரங்களில் குழிதோண்டப்பட்டது. தொடர்ந்து, 15 நாள் எர்த்ஒர்க் பணிகளோடு பாலம் கட்டும் பணிகள் பாதியிலே முடங்கின. நிதிஒதுக்கி, டெண்டர் விட்டு பணிகள் பாதியிலே முடங்கியதால், மேட்டுக்காடு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் குழந்தைகள், முதியவர்கள் இப்பள்ளத்தின் வழியே சென்றுவர முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து,பேரூராட்சி கவுன்சிலர் குணசுந்தரி கூறுகையில்,''நீண்ட இழுபறிக்கு பிறகு, பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் குளறுபடியால் பாலம் அமைக்கும் பணிகள் பாதியிலே நின்றுள்ளது,''என்றார். ஒப்பந்ததாரர் ஈஸ்வரன் கூறுகையில்,''கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பே, பாலம் கட்டுவதற்காக, எர்த்ஒர்க் பணிகள் முடிக்கப்பட்டன. கான்கிரீட் பணிகள் துவங்கும் நிலையில், உள்ளூர் மக்கள், பள்ளவாரிப்பகுதியில் உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளை எடுத்து விட்டுத்தான், பாலம் கட்டவேண்டுமென நிர்பந்தம் செய்தனர். இதனால், பாலம் கட்டும் பணி தடைபட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம், பாலம் கட்டுவதற்கு உண்டான இடத்தை துல்லியமாக சர்வே செய்து கொடுத்தால், பணிகளை உடனே துவக்கி விடுவோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us