தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் கோயில் உண்டியல்கள், விவசாய கிணறுகளில்
உள்ள மின் சாதனங்கள் தொடர்ந்து திருடப்படுகிறது.கடந்த சில நாட்களாக
சில்வார்பட்டியில் திருட்டு சம்பவம் நடக்கிறது.
கிராமத்தின் மேற்கு பக்கமாக
உள்ள விநாயகர் கோயில், பெருமாள் கோயில்களில் சில நாட்களுக்கு முன்பு
இரவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. நேற்று முன்தினம்
இதே ஊரைச் சேர்ந்த காமையா என்பவரின் தோட்ட கதவை உடைத்து மண்வெட்டி, சில
மின்சாதனங்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த கிராமத்தில் விவசாய கிணறுகளில்
மின் மோட்டார், மின்வயர்கள் திருடு போயுள்ளது. ஆனால் யாரும் கைதாகவில்லை.தொடர் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


