ADDED : ஆக 18, 2011 09:45 PM
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த இலவச மருத்துவ
முகாம் மற்றும் மாணவர்களுக்கு அகராதி வழங்கும்விழாவிற்கு கோபால்சாமி
எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
இந்து மறவர் பொதுசபை தலைவர் சுந்தர மூர்த்தி ,
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜா, அரசு வக்கீல் ஜெயராமன்
முன்னிலை வகித்தனர். மருத்துவ அணியை சேர்ந்த டாக்டர் மகாதேவன் சிகிச்சை
அளித்தார். மாணவ, மாணவிகளுக்கு அகராதி வழங்கப்பட்டது. சேத்தூர்
சேவுகபாண்டிய இந்து மறவர் துவக்கபள்ளி தலைமை ஆசிரியை மங்கை நன்றி கூறினார்.


