/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பிரச்னைக்கு தீர்வு காண எஸ்.பி.,யிடம் முறையீடுபிரச்னைக்கு தீர்வு காண எஸ்.பி.,யிடம் முறையீடு
பிரச்னைக்கு தீர்வு காண எஸ்.பி.,யிடம் முறையீடு
பிரச்னைக்கு தீர்வு காண எஸ்.பி.,யிடம் முறையீடு
பிரச்னைக்கு தீர்வு காண எஸ்.பி.,யிடம் முறையீடு
ADDED : ஆக 01, 2011 11:52 PM
குன்னூர் : குன்னூர் அருகே எல்லநள்ளி பகுதி கவுன்சிலர் மூர்த்தி மற்றும்
ஊர் மக்கள் நேற்று மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
குன்னூர் அருகே எல்லநள்ளியில் வசிக்கும் ராமன், லட்சுமணன், நாராயணன்
குடும்பத்தினருக்கும், அட்டுக்கொலை, எல்லநள்ளி ஊரில் வசிக்கும் மக்கள்
பலருக்கும் இடையே பல ஆண்டாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
'ராமன்
குடும்பத்தினர், மயான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், எல்லநள்ளி - ஹட்டி
நடைபாதை ஓரத்தில் சாண மூட்டைகளை அடுக்கி வைத்து இடையூறு செய்தும்
வருகின்றனர். இதுதொடர்பாக, அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு, வருவாய் துறை,
போலீஸ் தலையீட்டிற்கு பின் சமரசம் ஏற்பட்டது. எல்லநள்ளியில் நில
ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக, குன்னூர் மண்டல துணை தாசில்தார் ஜெய்சிங்,
விசாரித்தார். விசாரணையில், துணை தாசில்தார் ஜெய்சிங்கை மிரட்டி, தகாத
வார்த்தையில் பேசியதன் விளைவாக, தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில்,
ராமன், லட்சுமணன், நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நேற்று முன்தினம் எல்லநள்ளி ஹட்டி நடைபாதையில் கட்டப்பட்டுள்ள
கோவிலை லோடு ஏற்றி வந்த லாரி இடித்து சேதப்படுத்தியது. இதற்கு, ஊர் மக்கள்
சிலரின் தூண்டுதல் காரணம் என ராமன் குடும்பத்தினர் கேத்தி போலீசில்
கொடுத்து, ஊர் மக்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரில்
தொடரும் இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


