ADDED : செப் 06, 2011 10:14 PM
கடலூர் : கடலூர் அரசு சேவை இல்லத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
இல்ல கண்காணிப்பாளர் குமுதா தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று காண்காட்சியை பார்வையிட்டார். பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பழனி, ஆசிரியை அமுதா ஆகியோர் பொறுப்பேற்று கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியை சேவையில்ல ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் சுனாமி சிறப்பு குழந்தைகள் காப்பக குழந்தைகள் ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர்.


