Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் இறந்த தொழிலாளருக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும்கட்டுமான சங்கம் கோரிக்கை

கரூரில் இறந்த தொழிலாளருக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும்கட்டுமான சங்கம் கோரிக்கை

கரூரில் இறந்த தொழிலாளருக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும்கட்டுமான சங்கம் கோரிக்கை

கரூரில் இறந்த தொழிலாளருக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும்கட்டுமான சங்கம் கோரிக்கை

ADDED : அக் 05, 2011 01:11 AM


Google News
கரூர்: கரூரில் கட்டுமானப்பணியின் போது உயிரிழந்த தொழிலாளருக்கு நஷ்ட ஈடாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பாரதீய கட்டுமான தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட பாரதீய கட்டுமான தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் கூட்டம் சங்க தலைவர் ஆண்டவன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், கரூர் செங்குத்தபுரத்தில் பணியின்போது விபத்தில் இறந்த நான்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்தல், சம்பவத்துக்கு முழு பொறுப்பாளரான இட உரிமையாளர் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் மூலம் இழப்பீடு தொகையாக தொழிலாளிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்குதல், உரிய இழப்பீடு வழங்காதபட்சத்தில் பி.எம்.எஸ்., சார்பில் நிவாரணம் பெற முயற்சி செய்தல், தொழிலாளர்களுக்கு உரிய காப்பீடு வசதி செய்தவர்களுக்கு மட்டுமே கட்டுமான பணி மேற்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் துரை ரவி, கட்டுமான பேரவை துணைத்தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட செயலாளமர் சவுந்தர்ராஜன், பா லகுமரேன், கட்டுமான பொருளாளர் ராஜமாணிக்கம், சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us