/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவி அதிமுக., - திமுக., கடும் போட்டிகளக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவி அதிமுக., - திமுக., கடும் போட்டி
களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவி அதிமுக., - திமுக., கடும் போட்டி
களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவி அதிமுக., - திமுக., கடும் போட்டி
களக்காடு யூனியன் மாவட்ட கவுன்சிலர் பதவி அதிமுக., - திமுக., கடும் போட்டி
களக்காடு : களக்காடு யூனியனுக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக - திமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ''மாவட்ட கவுன்சிலுக்குட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர நவடிக்கை எடுப்பேன். பழுதான கிராம சாலைகளை உடனடியாக சரி செய்யவும், அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்துதர பாடுபடுவேன். குளங்கள் தூர்வாரப்பட்டு காய்வாய்கள் சீரமைக்கவும், முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் படுக்கை வசதியும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
களக்காடு பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரி, தொழில் கல்லூரி, கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுப்பேன். கிராமங்கள் தோறும் மின் விளக்குகள் சீர்செய்து தரவும், புதிய மின்விளக்குகள் அமைக்கவும், அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவன்பெருமாள் அளித்த பேட்டியில் கூறியதாவது: - ''களக்காடு மாவட்ட கவுன்சிலுக்குட்பட்ட 24 கிராம பஞ்.,களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி, சுகாதார வளாகம், நவீன கழிப்பிட வசதி செய்து கொடுக்க பாடுபடுவேன். கிராமப்புற பகுதி மக்களுக்கு பஸ் வசதி, சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். மாதத்திற்கு ஒருமுறை அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வேன்.
எல்லா இடங்களிலும் தெருவிளக்குகள் எரியவும், முக்கிய இடங்களில் ஹைமாஸ் லைட் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். மக்கள் சுகாதாரமாக வாழவும், ஒற்றுமையாக வாழ விழிப்புணர்வு முகாம், மருத்துவ முகாம் வசதி செய்து கொடுப்பேன்'' என்றார். களக்காடு மாவட்ட கவுன்சில் பதவிக்கு அதிமுக - திமுக இடையே நேரடி போட்டி இருந்தாலும் மற்ற அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் தேர்தலில் தீவிரம் காட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.


