/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்: அழகிரி எம்.பி.,நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்: அழகிரி எம்.பி.,
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்: அழகிரி எம்.பி.,
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்: அழகிரி எம்.பி.,
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்: அழகிரி எம்.பி.,
ADDED : ஆக 22, 2011 12:54 AM
நெல்லிக்குப்பம் : ''இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடு பட
வேண்டும்'' என அழகிரி எம்.பி., பேசி னார்.
நெல்லிக்குப்பம் அடுத்த
மேல்பட்டாம்பாக்கம் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட இளையோர் கருத்தரங்கம்
நடந்தது. மண்டல இயக்குனர் சடாச்சரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் மணி முன்னிலை வகித்தார். ராஜா வரவேற்றார். பேரூராட்சி
தலைவர் ஜெயமூர்த்தி, ஆசிரியர் வால்டர் தேவகுமார், முகமது யூசுப், யோகா
மாஸ்டர் ஜெயந்தி, ரஞ்சினி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கை
துவக்கி வைத்த அழகிரி எம்.பி., பேசுகையில், 'மக்கள் வரிப் பணத்தில்
இருந்துதான் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. விவசாயிகள் நவீன தொழில்
நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை பெருக்க வேண்டும். ஏழை மக்களின்
பட்டினியை போக்க தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால்
பலகோடி ஏழைகள் பயன் பெறுகின்றனர். இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு
கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார்.


