/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கரத் வலியுறுத்தல்வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கரத் வலியுறுத்தல்
வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கரத் வலியுறுத்தல்
வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கரத் வலியுறுத்தல்
வலுவான லோக்பால் மசோதா வேண்டும் : பிரகாஷ் கரத் வலியுறுத்தல்
திருவண்ணாமலை: ''ஊழலை ஒழிக்கும் வகையில், வலுவான லோக்பால் மசோதாவை அரசு கொண்டு வர வேண்டும்,'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் கரத் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது: வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அந்த கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்ததே மாபெரும் வெற்றிதான். அரசு கொண்டு வரும் லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை, வலுவான லோக்பால் கொண்டு வரும் வரை, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், அரசு ஊழியர்கள், மந்திரிகள் ஆகியோரையும் சேர்க்க வேண்டும். ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக, ஊழலுக்கு அடித்தளமாக உள்ள பெருமுதலாளிகள் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை நிர்ணயிக்கின்றனர். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையால், நாட்டில் ஊழல் பெருகிவிட்டது, ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை அளித்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்க, அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும். தாராள மயமாக்கல் கொள்கை, தனியார் மயம் போன்றவற்றால் கடந்த, 20 ஆண்டு காலமாக ஊழல் நடந்த வருகிறது. பணவீக்கம் காரணமாக வரி விதிப்பு, விலைவாசி உயர்வு போன்றவை மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இல்லாமை, விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாமை, பொருளாதார கொள்கை போன்றவற்றை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் இயக்கங்களை திரட்டி தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராடும். மத்திய அரசு மக்கள் நலனின் அக்கறை கொள்ளாமல், சில்லரை வணிகத்தில் பெரு முதலாளிகளை அனுமதிப்பது, பன்னாட்டு நிறுவனங்களை மகிழ்விப்பது போன்ற நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சில்லரை வணிகத்தை பாதுகாக்க அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் போராடும். இலங்கையில் தமிழக மக்களுக்கு சம உரிமை, கவுரவம் வேண்டும், இதற்காக மார்க்சிஸ்ட் குரல் கொடுக்கும். முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை சொந்த இடத்தில் குடி அமர்த்தவும், அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கோரி, செப்டம்பர் 7ம் தேதி டில்லியில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


