/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாவட்ட அறிவியல் கண்காட்சி : வி.கே.புரம் பள்ளி மாணவர் முதலிடம்மாவட்ட அறிவியல் கண்காட்சி : வி.கே.புரம் பள்ளி மாணவர் முதலிடம்
மாவட்ட அறிவியல் கண்காட்சி : வி.கே.புரம் பள்ளி மாணவர் முதலிடம்
மாவட்ட அறிவியல் கண்காட்சி : வி.கே.புரம் பள்ளி மாணவர் முதலிடம்
மாவட்ட அறிவியல் கண்காட்சி : வி.கே.புரம் பள்ளி மாணவர் முதலிடம்
ADDED : ஆக 28, 2011 01:11 AM
திருநெல்வேலி : நெல்லையில் நடந்த மாவட்ட அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வைத்திருந்த வி.கே.புரம், பாபநாசம் லேபர் வெல்பர் அசோசியேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடத்தை பிடித்தார்.
கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கடந்த 25ம்தேதி முதல் 27ம்தேதி மாவட்ட அறிவியல் கண்காட்சி-11 நடந்தது.
கண்காட்சியில் 34 பள்ளிகளை சேர்ந்த 97 படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் வி.கே.புரம் பாபநாசம் லேபர் வெல்பர் அசோசியேசன் பள்ளி மாணவர் வெங்கடேஷ் முதலிடத்தையும், வள்ளியூர் பாத்திமா மகளிர் பள்ளி மாணவி ஜெயகாயத்திரி 2ம் இடத்தையும், சங்கரன்கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர் சஞ்சய் 3ம் இடத்தையும் பிடித்தனர். இதுதவிர தென்காசி, இலஞ்சி பாரத் மாண்டிச்சேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் சார்லஸ், பாளை., மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர் மனோ பிரகாஷ், பணங்குடி சாக்ரெட் ஹாட் மேல்நிலைப்பள்ளி மாணவர் நடேஷ் ஆறுதல் பரிசுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று மாலை சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கர்நகர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணை தலைவர் திருமேனி தலைமை வகித்தார். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் சீதாராம் வரவேற்றார். திருவனந்தபுரம் சதிஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கணேசன், சிறந்த அறிவியல் படைப்புகளை வைத்திருந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளர் ஜெபராஜ் சாமுவேல் நன்றி கூறினார்.


