பரமக்குடி கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் நியமனம்: ஜெ.
பரமக்குடி கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் நியமனம்: ஜெ.
பரமக்குடி கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் நியமனம்: ஜெ.
ADDED : செப் 14, 2011 03:55 PM

சென்னை: பரமக்குடி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.சம்பத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கலவரம் குறித்த அறிக்கையை இரண்டு மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய உள்ளார் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடந்து. கூட்டம் தொடங்கியதும் அரக்கோணம் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரம் கிடையாது என்பதால், பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. பி்ன்னர் அனைத்து மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எதிர்கட்சிகள் வெளிநடப்பு : தமிழக சட்டசபையில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பேச கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சபையில் அனுமதி கோரின. ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதியளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தன.
ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் நியமனம்: எதிர்கட்சியினர் வெளிநடப்புக்கு பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாத காலத்திற்குள் கலவரம் தொடர்பான முழு அறிக்கையை அவர் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் விசாரணை கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட பின் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும் போலீசார் மீது நடத்தும் விசாரணையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்வு: எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ. 50 ஆயிரம் இனி 55 ஆயிரமாகவும், உறுப்பினர்களின் தொகுதிப்படி ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தபடுவதாகவும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் முதல் அமலாகும் என்றும் முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.
வாட்வரி உயர்வு: தமிழகத்தில் செல்போன், ஐபாட், ஐபோன் உள்ளிட்டவைகளுக்கான வாட் வரி உயர்த்தப்படுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்வரி உயர்வுக்கான சட்ட திருத்த மசோதா திருத்தப்பட்டது. இதன் படி செல்போன், ஐபாட், ஐபோன், புகையிலைப்பொருட்களின் உள்ளிட்டவைகளின் வாட் வரி 12.5 சதவீதத்திலிருந்து, 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டி.வி.டி. எல்.சி.டி. மானிட்டர்கள் மீதான வாட்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தமிழக அரசு வருவாய் இழப்பை தடு்க்கவே வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல், டீசலுக்கும் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தவறான நடைமுறையை தவிர்த்து வருவாயை அதிகரிக்கவே வாட்வரி வரி உயர்த்தப்பட்டுளளது. மேலும் கடந்த 2007-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வாட்வரி பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுஎன்றார்.