ADDED : அக் 11, 2011 01:56 AM
உளுந்தூர்பேட்டை : ஓட்டு எண்ணிக்கை மையத்தை தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.
திருநாவலூர் ஒன்றியத்தில் பதிவாகும் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுகள் களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் மாலிக் பெரோஸ்கான் (மதுவிலக்கு மற்றும் ஆயத் துறையின் செயலர்) நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், உளுந்தூர்பேட்டை பெஸ்கி பள்ளி மற்றும் மார்க்கெட் கமிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களை ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி தனபால், பி.டி.ஓ.,க்கள் தீனதயாளமூர்த்தி, சேகர், ஜார்ஜ்வாஷிங்டன், பேரூராட்சி செயல்அலுவலர் இந்திரா, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ஏகாம்பரம் உடனிருந்தனர்.


