டில்லி குண்டு வெடிப்பு:பலி 15 ஆக உயர்வு
டில்லி குண்டு வெடிப்பு:பலி 15 ஆக உயர்வு
டில்லி குண்டு வெடிப்பு:பலி 15 ஆக உயர்வு
ADDED : செப் 17, 2011 09:42 PM
புதுடில்லி:டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெற்று வந்த ரத்தன் லால் என்பவர் நேற்று இறந்தார்.
இதையடுத்து, குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.டில்லியில் ஐகோர்ட் வளாகம் அருகே, கடந்த 7ம் தேதி, சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 14 பேர் பலியாகினர்; 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் 24 பேர் படுகாயங்களுடன், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பில் தன் இரு கால்களையும் இழந்த ரத்தன் லால், 58, என்பவர், டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார்.இதையடுத்து, டில்லி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.