/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஓட்டுச்சீட்டுகளுக்கு நிறங்கள்தேர்தல் கமிஷன் வெளியீடுஓட்டுச்சீட்டுகளுக்கு நிறங்கள்தேர்தல் கமிஷன் வெளியீடு
ஓட்டுச்சீட்டுகளுக்கு நிறங்கள்தேர்தல் கமிஷன் வெளியீடு
ஓட்டுச்சீட்டுகளுக்கு நிறங்கள்தேர்தல் கமிஷன் வெளியீடு
ஓட்டுச்சீட்டுகளுக்கு நிறங்கள்தேர்தல் கமிஷன் வெளியீடு
ADDED : செப் 26, 2011 08:44 PM
விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிப்பவர்கள் குழப்பம் ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு ஓட்டுச்சீட்டுக்கும் நிறங்கள் ஒதுக்கி,மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அக்.
17, 19 தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி பகுதிகளுக்கு எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஊராட்சிகளில் ஊராட்சித்தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் , ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு ஓட்டுக்கள் போட உள்ளதால், பழைய முறையிலான ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதில், ஒவ்வொரு ஓட்டுச்சீட்டும் ஒரு நிறத்தில் வழங்கப்படவுள்ளன. மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள் , ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை , ஊராட்சித்தலைவருக்கு இளஞ்சிவப்பு ,ஒரு ஓட்டுச்சாவடியில் இரண்டு ஊராட்சி வார்டுக்கு ஓட்டுப்பதிவு இருந்தால், ஒரு உறுப்பினருக்கு நீலம், மற்றொரு உறுப்பினருக்கு வெள்ளை நிறம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஊராட்சி உறுப்பினர் என்றால் வெள்ளை கலர் பயன்படுத்தப்படும் . ஓட்டளிப்பவர்கள் குழப்பம் இல்லாமல் ஓட்டளிக்க , மாநில தேர்தல் கமிஷன் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.


