/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'
"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'
"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'
"மாணவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது; பண்படுத்த வேண்டும்'
ADDED : செப் 29, 2011 10:16 PM
சரவணம்பட்டி : ''மாணவர்களின் மனதை புண்படுத்துவராக ஆசிரியர்
இருக்கக்கூடாது; மனதை பண்படுத்துபவராக இருக்க வேண்டும்,'' என, கல்லூரியில்
நடந்த மாணவர் பேரவை துவக்க விழாவில் கவிதாசன் பேசினார்.
கோவை,
சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி.,கல்வியியல் கல்லூரியில் மாணவர் பேரவை
துவக்க விழா நடந்தது. . நிர்வாக அறங்காவலர் சாந்தி தங்கவேலு முன்னிலை
வகித்தார். கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் வரவேற்றார். கல்லூரி
சேர்மன் தங்கவேலு தலைமை வகித்து,பேசுகையில்,''ஒவ்வொரு நிமிடமும்
செய்திகளையும், கல்வியையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்; அறியாமல்
விட்டுவிட்டால், நம்மை யாரும் அறியமாட்டார்கள். காணமல் போய்விடுவோம்,''
என்றார். ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன்
பேசியதாவது: ஆசிரியர் பணி, அர்ப்பணிப்பு பணி. ஆசிரியர் வழிகாட்டியாக அல்ல,
நல்லவராக வாழ்ந்து காட்ட வேண்டும். மாணவர்களை புண்படுத்துவராக
இருக்கக்கூடாது; அவர்களின் மனதை பண்படுத்துபவராக இருக்க வேண்டும். இன்றைய
வேலையை இன்றே முடிப்பவன் சாதாரண மனிதன்; நாளைய வேலையை இன்றே முடிப்பவன்
மட்டுமே சாதனையாளன். தவறே செய்யாத மனிதன் இல்லை; தவறே செய்து
கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.இவ்வாறு, கவிதாசன் பேசினார்.மாணவர் பேரவை
தலைவராக சந்திரசேகர், துணைத்தலைவராக நல்லாசாமி, செயலராக மரியபுஷ்பம், இணைச்
செயலராக மனோஜ் உள்ளிட்டோர் தேர்வு பெற்றனர். மாணவர்கள், கடமையை சரிவர
செயலாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


