/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்ஜினியரிங் முடித்தவர்கள் இனி சென்னை "டூர்' வேண்டாம்இன்ஜினியரிங் முடித்தவர்கள் இனி சென்னை "டூர்' வேண்டாம்
இன்ஜினியரிங் முடித்தவர்கள் இனி சென்னை "டூர்' வேண்டாம்
இன்ஜினியரிங் முடித்தவர்கள் இனி சென்னை "டூர்' வேண்டாம்
இன்ஜினியரிங் முடித்தவர்கள் இனி சென்னை "டூர்' வேண்டாம்
ADDED : ஜூலை 13, 2011 10:09 PM
கோவை : 'இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்திலேயே, ஆன்லைன் மூலம் தங்கள் சான்றிதழை பதிவு செய்து கொள்ளலாம்'
என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பி.இ., மற்றும் பி.டெக்.,
இன்ஜினியரிங் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 61
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஜி., பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இன்ஜி., முடித்த
மாணவர்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில், செயல் வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மாநிலத்தின் வடபகுதியிலுள்ள 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையிலும்,
தென்பகுதியில் வசிப்பவர்கள் மதுரையிலும் பதிவு செய்கின்றனர். வீண் அலைச்சல்
மற்றும் போக்குவரத்துச் செலவு போன்றவற்றால் ஆண்டுதோறும் இன்ஜி.,
பட்டதாரிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் 10ம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் பதிவு
செய்யும் வசதி வழங்கப்பட்டது. அதேபோல், இன்ஜி., பட்டதாரிகளுக்கும் அந்தந்த
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆன்லைன் வசதி வழங்கப்படுகிறது. மாவட்ட
கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ''அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால், அங்கேயே இன்ஜி.,
பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் கல்வித்தகுதியை பதிவு செய்யலாம். இனிமேல்
சென்னை, மதுரைக்கு செல்ல வேண்டியதில்லை. ''பதிய செல்லும்போது இன்ஜி.,
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்று, ரேஷன்கார்டு, 10ம் வகுப்பு
அல்லது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் கல்லூரி
மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
''ரேஷன்கார்டில் உள்ள முகவரி அடிப்படையில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் பதிவை மேற்கொள்ள வேண்டும். அங்கேயே வேலை வாய்ப்பு அடையாள
அட்டையும் உடனடியாக வழங்கப்படும்,'' என்றார்.


