/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரம் நகராட்சி தி.மு.க., வேட்பாளர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்புராசிபுரம் நகராட்சி தி.மு.க., வேட்பாளர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
ராசிபுரம் நகராட்சி தி.மு.க., வேட்பாளர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
ராசிபுரம் நகராட்சி தி.மு.க., வேட்பாளர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
ராசிபுரம் நகராட்சி தி.மு.க., வேட்பாளர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
ADDED : அக் 08, 2011 01:25 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி தி.மு.க., வேட்பாளர் அரங்கசாமி, வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலில், ராசிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க.,
சார்பில், நகராட்சி துணைத்தலைவர் அரங்கசாமி போட்டியிடுகிறார். இவர்,
கடந்த சில தினங்களாக வார்டு பகுதிகளில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு
வருகிறார். அவர், ராசிபுரம் அகரம் வெள்ளாஞ் செட்டியார் சங்கம், இளைஞர்
மன்றம், ஆகியவற்றின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும், 15வது
வார்டு பகுதியில் உள்ள செக்கடி தெரு, அண்ணாசாலை, கன்னாரதெரு, 16வது வார்டு
பகுதியில் உள்ள அண்ணமார் கோவில்தெரு, ராஜாஜிதெரு, செல்வகணபதி தெரு,
பூக்கடைவீதி, பெரியகடைவீதி, மளிகைகடை, பூக்கடை வீதி ஜவுளிகடை, 18வது
வார்டு பகுதிகளான சிக்காசெட்டிதெரு, குஞ்சுமாரியம்மன்கோவில் தெரு,
கண்டிவெங்கட்ராமன் தெரு, ராமதீர்த்தம் தெரு, கணபதி ரைஸ்மிள் தெரு ஆகிய
பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அதேபோல், 19வது வார்டில்உள்ள கோனேரிப்பட்டி, டி.வி.எஸ்.தெரு, எல்லப்பா
காலனி, மைனர் நஞ்சப்பா தெரு, முனியன் சந்து, நரசிம்மர் தெரு, காதர்தெரு,
20வது வார்டு பகுதியான ராம்நகர், திரவுபதியம்மன் கோவில் தெரு, அருந்தததியர்
காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது, நகர
செயலாளர் ராமதாஸ், துணைச் செயலாளர் பழனியப்பன், கவுன்சிலர் வேட்பாளர்கள்
பூபதி(16வது வார்டு), வெங்கடாஜலம்(15வது வார்டு), வைத்தீஸ்வரன் (18 வது
வார்டு), ராஜம்மாள் (19 வது வார்டு), பாலு (20வது வார்டு), வார்டு
செயலாளர்கள் கணேசன், பழனியப்பன், வெங்கடேசன், தாமோதரன், கலைமணி, சங்கர்,
மாதேஸ்வரி, ஆறுமுகம், காண்டீபன், ராமசாமி, மாரியப்பன், முன்னாள்
கவுன்சிலர்கள் ராஜா, ராம்குமார், ரவிக்குமார், நகர இளைஞரணியைச் சேர்ந்த
சூப்பர் ராஜேந்திரன், சிவக்குமார் மற்றும் கல்யான் ஜீவல்லரி அருள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


