அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகிறார் ஹசாரே
அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகிறார் ஹசாரே
அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகிறார் ஹசாரே
ADDED : ஆக 28, 2011 11:17 AM
புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி 12 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் இருந்த அன்னா ஹசாரே, இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
இளநீர் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்த பின்னர் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் பேசிய ஹசாரே,தனது அடுத்த கட்ட போராட்டம் குறித்து தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகளை மாற்றி அமைக்க தான் போராட்டம் நடத்த உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.