/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆர்ய வைஸ்ய சபாவில்நவராத்திரி விழா போட்டிஆர்ய வைஸ்ய சபாவில்நவராத்திரி விழா போட்டி
ஆர்ய வைஸ்ய சபாவில்நவராத்திரி விழா போட்டி
ஆர்ய வைஸ்ய சபாவில்நவராத்திரி விழா போட்டி
ஆர்ய வைஸ்ய சபாவில்நவராத்திரி விழா போட்டி
ADDED : செப் 30, 2011 01:54 AM
ஈரோடு: ஈரோடு ஆர்ய வைஸ்ய சபாவில் நவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு
போட்டிகள் நடக்கிறது.ஈரோடு வாசவி மஹாலில் ஆர்ய வைஸ்ய சபாவும், ஸ்ரீ வாசவி
மகிளா சபா, வைஸ்யா டிரஸ்ட், வாசவி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும்
நவராத்திரி திருவிழா செப்., 28ல் துவங்கியது. செப்.28ல் அம்மனுக்கு வைரங்கி
சேவை அலங்காரமும், 29ல் விஷ்ணு அலங்கார நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து,
ஓவியப்போட்டி, தனி நபர் நடிப்பு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்
நடந்தது.
இன்று, லட்சுமி அலங்காரமும், மாலை 6 மணிக்கு வீணை கச்சேரி, ஆண்டு விழாவும்
நடக்கிறது. நாளை அகிலாண்டேஸ்வரி அலங்கார நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும்,
மாலை 6க்கு பக்த பிரகலாதன் நாடகமும் நடக்கிறது.அக்டோபர் 2ல் மியூசிக்கல்
சேர் போட்டியும், அசத்தல் கொண்டாட்ட நிகழ்ச்சி, மாலை 6க்கு கோலாட்டம், 3ம்
தேதி மாலை 7க்கு சமையல் போட்டியும், 4ம் தேதி காலை 11க்கும், மாலை 6க்கும்
லட்சார்ச்சணையும் நடக்கிறது.5ம் தேதி மாலை 6க்கு வேதபாராயணம், 6ம் தேதி
காலை 10க்கு ஹயக்ரீவர் ஹோமமும், மாலை 6க்கு பாசப்பறவைகள் நிகழ்ச்சியும்,
7ம் தேதி மாலை 6க்கு ரங்கநாதர் பஜனை மண்டலி சார்பில் தாச கீர்த்தனைகளும்,
இரவு 7.30க்கு 'விலை என்ன நிகழ்ச்சி?'யும் நடக்கிறது.போட்டிகளில் பங்கேற்க
விரும்புவோர் மகிளா சபாவில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.