/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியில் கூட்டமைப்பு துவக்கம்தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியில் கூட்டமைப்பு துவக்கம்
தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியில் கூட்டமைப்பு துவக்கம்
தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியில் கூட்டமைப்பு துவக்கம்
தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரியில் கூட்டமைப்பு துவக்கம்
ADDED : ஜூலை 25, 2011 01:59 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறை கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.
கம்ப்யூட்டர் துறை கூட்டமைப்பு தொடக்க விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்ப்யூட்டர் துø ற தொடக்க விழாவில் காரைக்கால் காமராஜர் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் ஆராமுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் சார்லஸ், துணை முதல்வர் நந்தகுமார், கல்லூரி புலமுதல்வர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், தொழில்நுட்ப போட்டிகளான ஆய்வு கட்டுரை, படைப்பாற்றல், பல்லூடக காட்சியளிப்பு, விடைகான் மற்றும் விளம்பர படைப்புகள் ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை பேராசிரியர் சந்திரசேகர், விரிவுரையாளர் கீதா ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக மாணவர் தலைவர் சரண்யா வரவேற்றார். மாணவர் புகழேந்தி நன்றி கூறினார்.