முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவு
முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவு
முஷாரப் சொத்துக்கள் பறிமுதல் செய்ய உத்தரவு
ADDED : ஆக 28, 2011 04:52 PM
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் முஷாரப் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து முஷாரப் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குகளையும் முடக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


