/உள்ளூர் செய்திகள்/சேலம்/பால் உற்பத்தி குறைவு தடுக்க புதிய வகை கால்நடை தீவனம்பால் உற்பத்தி குறைவு தடுக்க புதிய வகை கால்நடை தீவனம்
பால் உற்பத்தி குறைவு தடுக்க புதிய வகை கால்நடை தீவனம்
பால் உற்பத்தி குறைவு தடுக்க புதிய வகை கால்நடை தீவனம்
பால் உற்பத்தி குறைவு தடுக்க புதிய வகை கால்நடை தீவனம்
ADDED : ஜூலை 14, 2011 01:31 AM
சேலம்: வெயிலின் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க, சம்மர்கூல் தீவன ஊட்டச்சத்து கலவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக பால்வளத்தொழில் அதிகம் நடக்கிறது. கால்நடைகளை நோயில் இருந்து பாதுகாக்கவும், சூரிய வெப்பத்தில் பால் உற்பத்தி குறைவை தடுக்கவும் கால்நடைகளுக்கான சம்மர்கூல் எனும் தீவன துணை ஊட்டச்சத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், புரதம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. கோத்ரேஜ் அக்ரோவேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கால்நடை தீவனமானது, அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக கால்நடைகள் கருவுறுதல் குறைவு, பால் உற்பத்தி குறைவு உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க உதவும். ஒரு கிலோ பாக்கெட்டில், பவுடராக கிடைக்கிறது. 75 கிராம் பவுடரை, தண்ணீருடனோ, தீவனத்துடனோ கால்நடைகளுக்கு கலந்து கொடுத்து வந்தால், நோய் பாதிப்பில் இருந்து அவைகள் விடுபடும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


