Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கும் மக்கள் பரிதவிப்பு : குறைந்த வட்டியில் வங்கிகளில் பெற யோசனை

பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கும் மக்கள் பரிதவிப்பு : குறைந்த வட்டியில் வங்கிகளில் பெற யோசனை

பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கும் மக்கள் பரிதவிப்பு : குறைந்த வட்டியில் வங்கிகளில் பெற யோசனை

பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கும் மக்கள் பரிதவிப்பு : குறைந்த வட்டியில் வங்கிகளில் பெற யோசனை

ADDED : ஆக 01, 2011 10:42 PM


Google News

கிணத்துக்கடவு : கோவை மாவட்டத்தில், பைனான்ஸ் தொழிலில் செய்பவர்கள் சொத்துக்களை தங்களது பெயருக்கு கிரையம் செய்த பின்பு, வட்டிக்கு பணம் கொடுக்கப்படுவதால், வாங்கிய பணத்தை திரும்ப கட்ட முடியாதவர்களின் சொத்துக்கள் பறிபோகின்றது.

இதனால், வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் பரிதவிக்கின்றனர்.

பைனான்ஸ் தொழில் செய்பவர்கள், சிறு கடை முதல் பெரிய கடைகள் வரையும், வட்டிக்கு பணம் கொடுத்து, தினமும் வசூல் செய்கின்றனர். சிலர் சொத்துக்களை அடமானம் எழுதி கொடுத்து கடன் பெறுகின்றனர். இதில் இன்னும் சிலர் சொத்துக்களை விலைக்கு வாங்குவதற்கு, கிரைய ஒப்பந்தம் பத்திரம் எழுதி பதிவு செய்யும் முறையை பயன்படுத்தி, வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர். இதையும் கடந்து ஒருபடி மேல்சென்று, கடன் கேட்பவர்களின் முழுசொத்துக்களையும், பைனான்ஸ் தொழில் செய்பவர் பெயரில் கிரையப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு, அதன்பேரில் கடன் வழங்கப்படுகிறது. இம்முறை நம்பிக்கை என்ற அடிப்படையில் நடப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பத்திரம் எழுதி கொடுத்த பின்பு, வாங்கப்படும் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் போகும்போது, சொத்துக்களை இழப்பதை தவிர வேறுவழியில்லாமல் போய் விடுகிறது. ஒரு சில சமயத்தில், பணம் கொடுத்தவர் இறந்து போய்விட்டால், பணத்தை யாரிடம் செலுத்தி, மீண்டும் சொத்துக்களை மீட்பது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு பைனான்ஸ் என்ற பெயரில், சொத்துக்களை அபகரித்து வருகின்றனர். இதற்கு, பொதுமக்கள் உடன்படுகின்றனர். கிரையப் பத்திரம் எழுதும் செலவும், கடன் வாங்குபவர்களின் தலையில் கட்டப்படுகிறது.இதுமட்டுமில்லாமல், மீட்டர் வட்டி கணக்கில் வட்டியும் வசூல் செய்யப்படுகிறது. இதனையும் தாங்கி கொண்டு, பொதுமக்கள் கடன் வாங்கி வருகின்றனர். இதனால், பெரும்பாலான சொத்துக்களை இழக்க நேரிடும். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. தற்போது, சொத்தின் பேரில், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குறைந்த வட்டியில், வீட்டுக்கடன், வீட்டுமனையிடம், வீடு போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை பயன்படுத்தி, பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்கி, எளிய தவணைகளில் கட்டி வரலாம். சொத்துக்கள் பறிக்கப்படும் என்கிற பயம் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். இத்தனை வசதிகள் இருந்தும், பைனான்ஸ் என்ற பெயரில் மோசடி செய்து வரும் கும்பலிடம் சென்று, சொத்துக்களை கிரையம் எழுதி கொடுத்து பணம் வாங்கி, சொத்துக்களை இழந்து வருகின்றனர். தற்போது, சொத்துக்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சொத்துக்களை கிரையம் வாங்கும் பைனான்ஸ் தொழில் நடத்துபவர்கள், பணத்தை திரும்பி செலுத்திய நபரின் பெயருக்கு கிரையம் எழுதி கொடுப்பார்கள் என்பது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. இதனை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us