Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேர்தல் பணி நியமனத்தில் முரண்பாடு: ஆசிரியர்கள் அதிருப்தி

தேர்தல் பணி நியமனத்தில் முரண்பாடு: ஆசிரியர்கள் அதிருப்தி

தேர்தல் பணி நியமனத்தில் முரண்பாடு: ஆசிரியர்கள் அதிருப்தி

தேர்தல் பணி நியமனத்தில் முரண்பாடு: ஆசிரியர்கள் அதிருப்தி

ADDED : அக் 12, 2011 01:04 AM


Google News
திட்டக்குடி : மங்களூர் ஒன்றியத்தில்ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு முறையான பணி ஆணை வழங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி மங்களூர் ஒன்றியத்தில் வரும் 17ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 1,750 அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ராமநத்தம் ஊராட்சி திருமண மண்டபத்தில் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தன. வகுப்பில் பங்கேற்ற 250 பேருக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. மேலும் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓட்டுச்சீட்டு கிழித்துக் கொடுக்கும் பணியும், இடைநிலை மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர் மற்றும் அலுவலர் ஒன்று பணியிடம் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பி.டி.ஓ., கலியபெருமாள் மற்றும் துணை பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அனைவருக்கும் முறையான பணி ஆணை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us