/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை நீடிப்புஅரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை நீடிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை நீடிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை நீடிப்பு
அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை நீடிப்பு
ADDED : ஆக 28, 2011 11:48 PM
கோவை : மேட்டுப்பாளையம் ரோடு அரசு தொழிற் பயிற்சி மையத்தில் மாணவர்களின்
சேர்க்கை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள
அறிக்கை:கோவை, அரசு தொழிற் பயிற்சி மையத்தின் மாணவர் நேரடி சேர்க்கை, வரும்
செப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 21 வகை
தொழிற்பயிற்சி, பெண்களுக்கு ஆறு பிரிவில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்கள்
பிரிவில் பி.பி.ஓ., உணவு உற்பத்தி, ரேடியோ, 'டிவி' ஆகிய பிரிவுகளில்
சேர்க்கை நடக்கிறது. மேல்நிலை படிப்பு முடித்த மாணவர்களுக்கு மெக்கட்ரானிக்
பிரிவு மற்றும் மேல்நிலை படிப்பு முடித்த மாணவியர்களுக்கு பேஷன் டெக்னாலஜி
பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது. பயிற்சி கட்டணம் முற்றிலும் ரத்து
செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் உதவித்தொகை, பஸ் பாஸ் வசதி இருக்கிறது.
பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
ஏற்படுத்தி தரப்படுகிறது. சேர விரும்பும் மாணவர்கள், வரும் செப்., 15ம்
தேதிற்குள் பயிற்சி கல்லூரி முதல்வரை அணுக வேண்டும். மேலும், விபரங்களுக்கு
0422-2642041 (ஆண்கள்); 2645778 (பெண்கள்) என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.


