ADDED : செப் 10, 2011 03:45 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஆசிரியர் தினவிழா ஓவியப்போட்டிகள் நடந்தது.
கோவில்பட்டியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஓவியப் போட்டி நடந்தது.
கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடத்ந ஓவியப் போட்டியை
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பெரியசாமிபாண்டியன் தலைமை
வகித்தார். நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் செல்வராஜன்
முன்னிலை வகித்தார். காமராஜ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் உலகம்மாள்
வரவேற்றார்.
தொடர்ந்து மாரீஸ்வரன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜ்,
நாடார் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஜான்கணேஷ் ஆகியோர் ஆசிரியர் தினம்
குறித்து பேசினர். மேலும் ஜிவிஎன் கல்லூரி பேராசிரியர் கலந்து கொண்டு
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தவிர டாக்டர்
சிதம்பரம் கோவில்பட்டி வட்டார அளவில் சிறப்பாக பணியாற்றிய சுமார் 29
ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். இப்போட்டியில் எவரெஸ்ட் மேல்நிலைப்
பள்ளியும், ஜிவிஎன் கல்லூரியும் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது.
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பாலகணேஷ் நன்றி
கூறினார். கோவில்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இலக்கிய ரவீந்தர் செய்திருந்தார்.


