/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/தி.மு.க., வேட்பாளர் மாரடைப்பால் மரணம்தி.மு.க., வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
தி.மு.க., வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
தி.மு.க., வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
தி.மு.க., வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
ADDED : அக் 08, 2011 11:54 PM
திருவண்ணாமலை: செங்கம் யூனியனுக்கு உட்பட்ட 18வது வார்டுக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.செங்கம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமசாமி.
இவர் செங்கம் யூனியன் 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வார்டில் இவர் உள்ளிட்ட 8 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராமசாமி கடந்த 6ம் தேதி மாலை திடீரென மாரடைப்பால் இறந்தார். இதனால், இந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளார். தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு பின் இந்த வார்டில் தேர்தல் நடக்குமா, ஒத்திவைக்கப்படுமா? என்பது தெரியவரும்.


