/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி.,யில் தொ.மு.ச.,தேர்தல் இன்று முதல் மனு தாக்கல் ஆரம்பம்என்.எல்.சி.,யில் தொ.மு.ச.,தேர்தல் இன்று முதல் மனு தாக்கல் ஆரம்பம்
என்.எல்.சி.,யில் தொ.மு.ச.,தேர்தல் இன்று முதல் மனு தாக்கல் ஆரம்பம்
என்.எல்.சி.,யில் தொ.மு.ச.,தேர்தல் இன்று முதல் மனு தாக்கல் ஆரம்பம்
என்.எல்.சி.,யில் தொ.மு.ச.,தேர்தல் இன்று முதல் மனு தாக்கல் ஆரம்பம்
ADDED : அக் 01, 2011 11:46 PM
நெய்வேலி : என்.எல்.சி., தொ.மு.ச., தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.என்.எல்.சி., தொ.மு.ச.,தேர்தல் வரும் 14ம் தேதி நடக்கிறது.
தேர்தலையொட்டி இன்று 2ம் தேதி முதல் தொ.மு.ச., அலுவலகத்தில் மனு தாக்கல் தொடங்குகிறது.உள்ளாட்சித் தேர்தலுக்கு இணையாக நெய்வேலி தொ.மு.ச., தேர்தல் களை கட்டுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இத் தேர்தலில் பல அணிகள் களம் இறங்கியுள்ளதால் மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓய்வு பெற குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உள்ள வேட்பாளர்கள் மட்டுமே தொ.மு.ச., தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், சீனியர் நிர்வாகிகள் பலரும் தங்களது இறுதி வாய்ப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய தொ.மு.ச., தலைமை நிர்வாகிகளான கோபாலன், வீர ராமச்சந்திரன், காத்தவராயன் மற்றும் ஆறுமுகம் உள்ளிட்ட அணியினர் நேற்று டவுன்ஷிப் வட்டம் 19ல் தமிழர் பண்பாட்டுக் கழகத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தினர். அதில் தங்களது 3 ஆண்டு சாதனைகளை விளக்கியும் அடுத்ததாக செய்யப் போகும் திட்டங்களை விளக்கி தங்களது 'மாஸ்' என்ன என்பதைக் காட்டினர்.இதேப்போன்று ராஜவன்னியன், திருமாவளவன், ரகுராமன், சுகுமார், வரதராஜன் அணியினர் என பல அணிகளும் தங்களது பலத்தை காட்டும் வகையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


