/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தை பள்ளியில் சுதந்திர தினபோட்டிகள்குடந்தை பள்ளியில் சுதந்திர தினபோட்டிகள்
குடந்தை பள்ளியில் சுதந்திர தினபோட்டிகள்
குடந்தை பள்ளியில் சுதந்திர தினபோட்டிகள்
குடந்தை பள்ளியில் சுதந்திர தினபோட்டிகள்
ADDED : ஆக 09, 2011 01:40 AM
கும்பகோணம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொரநாட்டு கருப்பூர் கிளையும்,
கார்த்தி வித்யாலயா பள்ளியும் இணைந்து கும்பகோணம் கல்வி மாவட்ட அளவிலான
பள்ளி மாணவர்களுக்கிடையே சுதந்திரன தின விழா போட்டிகளை நடத்தின.
போட்டியை
அத்திகடை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வெங்கடாச்சாரி துவக்கி
வைத்தார். நிகழ்ச்சிக்கு கொரநாட்டு கருப்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மேலாளர் ராஜன் தலைமை வகித்தார். கார்த்தி வித்யாலயா பள்ளி முதல்வர்
அம்பிகாபதி, தாளாளர் கார்த்திகேயன் ஆகியோர்
சிறப்புரையாற்றினார்.போட்டியில், யு.கே.ஜி முதல் 2ம் வகுப்பு வகுப்பு மாணவ,
மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டியும், 3ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
மாணவ, மாணவிகளுக்கு தேசிய சின்னங்கள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம்
வகுப்பு வரை சுந்திரம் பெற்றதால் நன்மையா? தீமையா? என பேச்சுபோட்டியும்,
எஸ்.எஸ்.எல்.சி., முதல் ப்ளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு தேசத்தின் இன்றைய
நிலை குறித்த பேச்சு போட்டிகளும் நடந்தது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


