ADDED : ஆக 27, 2011 11:47 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பசுமைப் படை சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் லில்லி உத்தரவின் பேரில், சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கவும், மாவட்டத்தை பசுமை நகராக மாற்றவும் அனைத்து பள்ளிகளிலும் என்.எஸ்.எஸ்.,- என்.சி.சி., மற்றும் பசுமைப் படை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று துவங்கியது. தர்மபுரி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.


