அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு ஒத்திவைப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு ஒத்திவைப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு ஒத்திவைப்பு
ADDED : ஆக 18, 2011 12:53 AM
தூத்துக்குடி : அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு மீதான விசாரணையை, இம்மாதம் 22ம் தேதிக்கு தூத்துக்குடி கோர்ட் ஒத்திவைத்தது.
ஆறுமுகநேரி தி.மு.க., நகர செயலர் சுரேஷை கொலை செய்ய தூண்டிய வழக்கில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 10ம்தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். இவர், ஜாமின் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு செய்தார். நேற்று இம்மனு மீதான விசாரணை நடந்தது. வழக்கு தொடர்பாக, அனிதா ராதாகிருஷ்ணனை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில், திருச்செந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது ஆக., 19ம் தேதி(நாளை) விசாரணைக்கு வருவதால், இந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டுமெனவும், அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் வலியுறுத்தினார். இதற்கு, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான ஜெபராஜ், செங்குட்டுவன் உள்ளிட்ட 12 தி.மு.க., வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடி ஜாமின் வழங்க கேட்டுக்கொண்டனர். இதனிடையே, அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி பிரபுதாஸ், அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு மீதான விசாரணையை, இம்மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.


