/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கனமழை: குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்புகனமழை: குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை: குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை: குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை: குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 19, 2011 09:32 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால் பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இம்மாதம் துவக்கத்தில் மழை பொழிவு இல்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சியிலுள்ள குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரத்துவங்கியுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.


