/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அமைச்சர் அறைக்கு எம்.எல்.ஏ., செல்வது தவறாஅமைச்சர் அறைக்கு எம்.எல்.ஏ., செல்வது தவறா
அமைச்சர் அறைக்கு எம்.எல்.ஏ., செல்வது தவறா
அமைச்சர் அறைக்கு எம்.எல்.ஏ., செல்வது தவறா
அமைச்சர் அறைக்கு எம்.எல்.ஏ., செல்வது தவறா
ADDED : செப் 03, 2011 01:55 AM
புதுச்சேரி : சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், ஓம்சக்தி சேகர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜவேலு, 'அ.தி.மு.க., எம்.எல்.
ஏ.,க்கள் எந்த அமைச்சரையும் பார்த்து எதுவும் கேட்பது கிடையாது. அவர்கள் கேட்டால் செய்து தருவோம்' என்றார்.அப்போது ஓம்சக்தி சேகர் குறுக்கிட்டு, 'மக்கள் மன்றத்தில்தான் நாங்கள் கேட்போம். அமைச்சரின் அறைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை' என்று ஆவேசமாக கூறினார். 'அமைச்சர்களின் அறைக்கு எம்.எல். ஏ.,க்கள் செல்வதில் தவறு இல்லை. செல்வது தவறு என்பது மாதிரி பேசுவது தவறு' என சபாநாயகர் சபாபதி தெரிவித்தார். சபாநாயகர் மேலும் கூறும்போது,'இங்கே (சபை) பேசுவதுடன் நிறுத்திக் கொண்டால் வேலை நடக்காது. மல்லாடியைபோல பைலை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக செல்ல வேண்டும்' என்றார்.புரு÷ஷாத்தமன் எம்.எல்.ஏ., குறுக்கிட்டு, 'இங்கே பேசினால் வேலை நடக்காது என கூறுவது தவறு' என்று வாதிட்டார்.முதல்வர் ரங்கசாமி,'சபாநாயகர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். புரு÷ஷாத்தமனும் அனுபவம் உள்ளவர். அவர்களுக்கு அனைத்தும் தெரியும்' என கூறினார்.


