விழிப்புணர்வு குறைவால் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சிக்கல்
விழிப்புணர்வு குறைவால் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சிக்கல்
விழிப்புணர்வு குறைவால் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சிக்கல்
ADDED : ஆக 07, 2011 01:50 AM
காரைக்குடி : போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முடங்கியுள்ளது.
குழந்தை திருமணம், பெண் குழந்தை கடத்தலை தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை கண்காணிக்க மாவட்ட அளவில் ஒரு நன்னடைத்தை அலுவலர் உள்ளார். திட்டம் துவங்கிய சில மாதங்களில் மாவட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மாவட்ட அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நன்னடைத்தை அலுவலருக்கு வாகன வசதி, அலுவலக உதவியாளர் இன்றி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தவிர, இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள், சமூக நலத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுகாதார துறை அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவில் இதற்கென தனி அலுவலகம் அமைத்து, போதிய அலுவலர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான், குழந்தைகள் மீதான கொடுமையை எளிதில் தடுக்கலாம்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், '' இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்கவிருந்த பல திருமணங்கள் சட்ட ரீதியான முறையில் தடுத்து நிறுத்தப்பட்டன. மனநலம் பாதித்து ரோட்டில் சுற்றித்திரிந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தை ஒரு கண்காணிப்பாளர் மட்டுமே கண்காணித்து வருகிறார். எனவே, அலுவலர்கள் பற்றாக்குறை, வாகன வசதி, போதிய விழிப்புணர்வு இன்றி, மாவட்ட அளவில் இத்திட்டம் கிடப்பில் உள்ளது.


