/உள்ளூர் செய்திகள்/மதுரை/கடைகளை ஆக்கிரமித்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார்கடைகளை ஆக்கிரமித்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார்
கடைகளை ஆக்கிரமித்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார்
கடைகளை ஆக்கிரமித்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார்
கடைகளை ஆக்கிரமித்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார்
ADDED : ஆக 07, 2011 02:55 AM
மதுரை:மதுரை நெல்பேட்டையில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை மீட்டு தரக்கோரி
வாடகை உரிமைதாரர்கள் நலச்சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார்
மனு அளித்தனர்.சங்க நிர்வாகிகள் கருப்பையா, டேவிட் ஞானகுமார் ஆகியோர்
மனுவில் கூறியுள்ளதாவது: லாலா பேட்டை என்பது லாலா ரெங்க சத்திரத்திற்கு
சொந்தமானது. 50 ஆண்டாக நெல் தொழில் செய்து வருவதால் 'நெல்பேட்டை' என
அழைக்கப்பட்டது. லாலா ரெங்க சத்திரம் எங்களிடம் வாடகை வசூல் செய்யும்
குத்தகை உரிமையை பெருமாள் என்பவரிடம் ஒப்படைத்தது. மாட்டுத்தாவணி அருகே
ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்கப்பட்ட பின் நெல் மண்டி அங்கு
மாற்றப்பட்டது. தற்போது இந்த இடத்தை குடோனாக பயன்படுத்தி
வருகிறோம்.கொடிக்குளத்தை சேர்ந்த போஸ் வாடகையை தன்னிடம் தர வேண்டும்
என்கிறார். பெருமாளும் வாடகை கேட்கிறார். இதுதொடர்பாக முதலாவது கூடுதல்
சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 2008ல் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டது.
கோர்ட் உத்தரவை மதிக்காமல் அடியாட்களுடன் வந்து போஸ் மிரட்டுகிறார்.
கடைகளுக்குள் செல்ல முடியாமல் தடுப்புக்களை அமைத்துள்ளார். கடைகளை மீட்டு
கொடுக்க வேண்டும். போஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.