/உள்ளூர் செய்திகள்/தேனி/மைதானத்தில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்மைதானத்தில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்
மைதானத்தில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்
மைதானத்தில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்
மைதானத்தில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2011 10:29 PM
பெரியகுளம்:தினமும் நூற்றுக்கணக்கானோர் பயிற்சி செய்யும்,பெரியகுளம்
நியூகிரவுண்டில் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
நியூகிரவுண்ட் சுமார் 1.5 கி.மீ., தூரம் பரப்பளவு
கொண்டது. இங்கு தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இங்கு
வருபவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை. இங்கு வி.நி.அரசு
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உடற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரியகுளம் கல்வி மாவட்டம் பள்ளிகளுக்கு இடையேயான பல போட்டிகள் இங்கு
நடத்தப்படுகின்றன. ராணுவம், கப்பல்படை, போ லீஸ் உள்ளிட்ட வேலையில்
சேர்வதற்கு உடல்திறனை மேம்படுத்துவதற்கான பார்கம்பி, புல்லப்ஸ் கம்பிகள்
சேதமடைந்துள்ளன. நகராட்சி நிர்வாகம் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து
கொடுக்க வேண்டும்.


