/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/போலீஸ் துறையில் சீர்திருத்தம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்போலீஸ் துறையில் சீர்திருத்தம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
போலீஸ் துறையில் சீர்திருத்தம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
போலீஸ் துறையில் சீர்திருத்தம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
போலீஸ் துறையில் சீர்திருத்தம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
ADDED : செப் 15, 2011 09:13 PM
பரமக்குடி : 'போலீஸ் துறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்' என மார்க்சிஸ்ட் வலியுறுத்தியது.
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களை, சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்திரராஜன் தலைமையிலான குழு நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது. பின்னர் சவுந்திரராஜன் கூறியதாவது: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஆனால், அவர்களை கொண்டே நீதி விசாரணை நடத்தினால், சரியான தீர்வு கிடைக்காது. காட்டு விலங்குகள் தாக்கி பலியானவர்களுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து இந்த அரசு, துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது. போலீஸ் துறை சீர்திருத்தம் செய்ய வேண்டும். இது ஒன்றும் ஜாதி மோதல் அல்ல. ஆனால் சுவரில் எழுதபட்ட வாசகத்தால் மட்டுமே கொலை நடந்ததாக தமிழக முதல்வர் சட்டசபையில் பதிவு செய்தார். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், போலீசாருக்கு பயந்து வீடுகளில் பெண்கள் மட்டுமே உள்ளனர். எங்களின் இந்த ஆய்வும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்றார். சட்டசபை கொறடா பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., க்கள் அண்ணாத்துரை, சம்பத் உடனிருந்தனர்.


