/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்புபங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
ADDED : அக் 04, 2011 01:04 AM
அன்னூர் : 'பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சம்பள மாற்றத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலர், மக்கள் நலப்பணியாளர் மற்றும் கிராமப்புற நூலகர்கள் அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட நிரந்தர பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். உச்சவரம்பு இல்லாமல் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும், என்பது உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், நேற்று முன் தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சுகுமாரன் பேசுகையில்,''அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்ஷன் திட்டம் பெரும் அநீதியாகும். இதை கைவிட வேண்டும். பயனளிப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த ஏழு சதவீத அகவிலைப்படியை மாநில அரசு உடனே வழங்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட துணைத் தலைவர் இன்னாசி முத்து, துணை பி.டி.ஓ., ரவிச்சந்திரன், அன்னூர் கிளை செயலர் கண்ணப்பன், பொருளாளர் கோவிந்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


