/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சீலப்பாடியில் சுகாதார நிலையம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதிசீலப்பாடியில் சுகாதார நிலையம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
சீலப்பாடியில் சுகாதார நிலையம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
சீலப்பாடியில் சுகாதார நிலையம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
சீலப்பாடியில் சுகாதார நிலையம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''சீலப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முயற்சி எடுப்பேன்,'' என, திண்டுக்கல் ஒன்றியம் 7 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பி.ஆர்.லோகநாதன் கூறினார்.சீலப்பாடி, என்.எஸ்., நகரில் அவர் பேசியது:என்னை வேட்பாளராக அறிவித்த முதல்வர், அமைச்சர் விஸ்வநாதனுக்கு நன்றி.
திருச்சி ரோட்டில் பாலம் கட்டுவதால், பஸ் போக்குவரத்து கரூர் ரோட்டில் அதிகமானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கவும், விவசாயிகள் பயன் பெறவும், பஸ் போக்குவரத்தை உழவர் சந்தை வழி திருப்பி விட ஏற்பாடு செய்தேன். சீலப்பாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வேன். காந்திஜிநகர், கூட்டுறவு நகர், பெரியார்காலனி பகுதியில் சாக்கடை, ரோடு, கழிப்பிடம், தெருவிளக்கு வசதிகள் செய்து தருவேன். முத்துநகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவேன். பெரியார் காலனி, களப்பகோணார்பட்டி, நந்தவனப்பட்டி, கொத்தம்பட்டியில் கழிப்பறை வசதியும், என்.எஸ்., நகரில் குடிநீர் பிரச்னை தீர்க்கவும், ரோடு போடவும் பாடுபடுவேன். சீலப்பாடியில் திருட் டை தடுக்க புறக்காவல் நிலையம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்வேன். ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.25 ஆயிரம், தாலிக்கும் தங்கம், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ. 50 ஆயிரம் கிடைக்க ஏற்பாடு செய்வேன். கறவை மாடு, ஆடு உரியவர்களுக்கு கிடைக்கும். முதியோர் உதவித் தொகை, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி உட்பட அனைத்து இலவச திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும் வகையில் பணியாற்றுவேன், என்றார்.


