/உள்ளூர் செய்திகள்/மதுரை/தி.மு.க.,ஆட்சியில் ஊழல் :அமைச்சர் செல்லூர் ராஜூதி.மு.க.,ஆட்சியில் ஊழல் :அமைச்சர் செல்லூர் ராஜூ
தி.மு.க.,ஆட்சியில் ஊழல் :அமைச்சர் செல்லூர் ராஜூ
தி.மு.க.,ஆட்சியில் ஊழல் :அமைச்சர் செல்லூர் ராஜூ
தி.மு.க.,ஆட்சியில் ஊழல் :அமைச்சர் செல்லூர் ராஜூ
ADDED : செப் 16, 2011 01:25 AM
மதுரை : அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
எம்.ஜி.ஆர்., இளைஞரணி நகர் செயலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: அ.தி.மு.க.,2011 ல் இருக்காது, என்றனர். சொன்னவர்கள் ஓடி ஒளிந்துகொண்டிருக்கின்றனர். கடந்த தி.மு.க.,ஆட்சியில் கொப்பரை தேங்காய் கொள்முதலில் 634 கோடி, இலவச காஸ் அடுப்பு வழங்கியதில் 164 கோடி ரூபாய் மற்றும் கூட்டுவு வங்கிகளில் போலி நகைகள் வைத்ததில் ஊழல் நடந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அண்ணாதுரை கனவை நிறைவேற்றி வருகிறார். நலத்திட்டங்கள் தொடர உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள், என்றார். போஸ் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.


