/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சிஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி
ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி
ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி
ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி
ADDED : செப் 30, 2011 02:26 AM
கடையநல்லூர் : ஆய்க்குடி ஜெ.பி.இன்ஜினியரிங் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடந்தது.
புத்தகங்கள் வாங்கி படிக்கும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு ஆய்க்குடி ஜெ.பி. இன்ஜினியரிங் கல்லூரியும், புளியங்குடி கிருஷ்ணா புத்தக நிலையமும் இணைந்து ஜெ.பி.கல்லூரி கலையரங்கில் இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சியை நடத்தியது. கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஞானதுரை, கலைக்கல்லூரி முதல்வர் ஹரி விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். இயக்குனர் ஆக்னல் நவீன் முதல் புத்தகத்தை வாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டும், புத்தகங்களை வாங்கியும் பயனடைந்தைனர். ஏற்பாடுகளை இன்ஜினியரிங் கல்லூரி நூலகர் ராஜா செய்திருந்தார்.