வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ.26ஆயிரம் பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ.26ஆயிரம் பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ.26ஆயிரம் பறிமுதல்

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஓட்டுக்கு ரூ.
காரியாபட்டி அருகே டி.செட்டிகுளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு, தரிசியா என்பவர் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற, இவரது தந்தையான சத்துணவு பொறுப்பாளர் சின்னபோஸ், ஊராட்சிக்குட்பட்ட உடுப்புகுளத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம்,நேற்று முன் தினம் இரவு பட்டுவாடா செய்தார்.
ஆனால், இதை வாக்காளர்கள் வாங்க மறுத்ததால், வீட்டில் போட்டுவிட்டு சென்றார். வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை தாசில்தார் பொன்ராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது, வாக்காளர்கள் வீட்டில் போடப்பட்ட ரூ. 26 ஆயிரத்தை,ரியாஸ் முகமது வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., புகார்படி காரியாபட்டி போலீசார், சின்னபோஸ் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.


