/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/5 ரேஷன் கடை விற்பனையாளர்கள் "சஸ்பெண்ட்': ரூ.84 ஆயிரம் அபராதம்5 ரேஷன் கடை விற்பனையாளர்கள் "சஸ்பெண்ட்': ரூ.84 ஆயிரம் அபராதம்
5 ரேஷன் கடை விற்பனையாளர்கள் "சஸ்பெண்ட்': ரூ.84 ஆயிரம் அபராதம்
5 ரேஷன் கடை விற்பனையாளர்கள் "சஸ்பெண்ட்': ரூ.84 ஆயிரம் அபராதம்
5 ரேஷன் கடை விற்பனையாளர்கள் "சஸ்பெண்ட்': ரூ.84 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 14, 2011 01:33 AM
ஈரோடு: கூட்டுறவு ரேஷன்கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து விற்பனையாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; 84 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை மூலம், 998 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 14, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மூலம் 28 உள்பட 1,030 ரேஷன்கடைகள் செயல்படுகின்றன.
ரேஷன்கடைகளில் முறைகேடுகள் நடக்காமலிருக்க, இலவச அரிசித் திட்டம் அமல்படுத்திய ஜூன் முதல் தேதியிலிருந்து, பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். 11 அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். ஜூன் மாதம் மட்டும், எடை குறைப்பு, போலி பில், சரக்கு இருப்பு குறைவு, கடையில் போர்டு வைக்காதது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஐந்து பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விதி மீறி செயல்பட்ட விற்பனையாளரிடமிருந்து ஜூன் மாதத்தில் 60 ஆயிரம் ரூபாய், ஜூலை முதல் வாரத்தில் 24 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 84 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. பவானி பகுதியில் உள்ள 14 ரேஷன் கடைகளில், துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மீனா அருள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடமிருந்து 3,242 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கூட்டுறவு இணைப்பதிவாளர் பாபு கூறுகையில், ''ரேஷன்கடைகளில் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபடுவர். முறைகேடு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


