/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழக பாடத்திட்ட திருத்தம் பட்டப்படிப்பு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புஎம்.ஜி.ஆர்.பல்கலைக் கழக பாடத்திட்ட திருத்தம் பட்டப்படிப்பு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழக பாடத்திட்ட திருத்தம் பட்டப்படிப்பு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழக பாடத்திட்ட திருத்தம் பட்டப்படிப்பு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழக பாடத்திட்ட திருத்தம் பட்டப்படிப்பு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 28, 2011 01:11 AM
திருநெல்வேலி : சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவர்களை வேரறுக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக் கழகத்தின் பாடத்திட்ட திருத்தம் மற்றும் பட்டப்படிப்பின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளை., சித்த மருத்துவக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஈடுபட்டனர்.
சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின் பாடத்திட்ட திருத்தம் மற்றும் பட்டப்படிப்பின் பெயர் திருத்தத்தின் எதேச்சதிகார நடவடிக்கையை கைவிடவேண்டும். நவீன மருத்துவ அறிவியல் பாடங்களை நீக்குவது பாரம்பரிய மருத்துவமுறைகளை ஒழித்துக் கட்டி பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தக் கூடாது. சித்த மருத்துவத்திற்கென தனிப்பல்கலைக் கழகம் உடனே துவங்கவேண்டும். சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளின் வளர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஊக்கப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


