/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றவாளி!' அ.தி.மு.க., வேட்பாளர் மீது ஸ்டாலின் தாக்கு"ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றவாளி!' அ.தி.மு.க., வேட்பாளர் மீது ஸ்டாலின் தாக்கு
"ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றவாளி!' அ.தி.மு.க., வேட்பாளர் மீது ஸ்டாலின் தாக்கு
"ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றவாளி!' அ.தி.மு.க., வேட்பாளர் மீது ஸ்டாலின் தாக்கு
"ஜெயிலில் இருக்க வேண்டிய குற்றவாளி!' அ.தி.மு.க., வேட்பாளர் மீது ஸ்டாலின் தாக்கு
ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: ''ஜெயிலில் இருக்கவேண்டிய குற்றவாளி, அ.தி.மு.க., வேட்பாளராக வெளியில் உலாவுகிறார்.
வெளியில் இருந்து ஓட்டு கேட்க வேண்டிய முன்னாள் அமைச்சர் நேரு ஜெயிலில் இருக்கிறார்,'' என்று முன்னாள் துணைமுதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருச்சி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர், முன்னாள் அமைச்சர் நேரு, மேயர் வேட்பாளர் விஜயா, அந்தந்த பகுதி கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் துணை முதல்வரும், கட்சியின் பொருளாளருமான ஸ்டாலின், நேற்று மாலை திருச்சியில் பிரச்சாரத்தை துவக்கினர்.திருச்சி காஜாமலை, பஞ்சப்பூர், எ.புதூர், கிராப்பட்டி, கருமண்டபம், பிராட்டியூர், ராம்ஜிநகர், பெரியமிளகுப்பாறை ஆகிய பகுதிகளில், ஸ்டாலின் பேசியதாவது:கடந்த பொதுத்தேர்தலில், 50 ஆண்டு செய்ய வேண்டிய சாதனைகளை, வெறும் ஐந்தே ஆண்டுகளில் தி.மு.க., செய்துவிட்டது. அதனால் என்னவோ, ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் ஓட்டளித்தீர்கள்.ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில் அது மாற்றம் இல்லை. வெறும் ஏமாற்றம் என்பதை புரிந்து கொண்டீர்கள். தி.மு.க., அரசின் சாதனை திட்டங்கள் மட்டுமல்லாது, அ.தி.மு.க., வாக்குறுதியாக அளித்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.மாறாக, தி.மு.க.,வையும், தி.மு.க.,வினரையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலிதா செயல்படுகிறார். அவருக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள். திருச்சி இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. தி.மு.க., வேட்பாளர் வெற்றியின் மூலம் ஆட்சியை கவிழ்த்து விட முடியாது. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்க முடியாத நிலை உள்ளது.எங்களுக்கு பக்கபலமாகவும், உங்களுக்காக குரல் கொடுக்கவும், இடைத்தேர்தல் வேட்பாளர் நேருவை வெற்றிப்பெற செய்யுங்கள். ஆட்சியில் உள்ள ஜெயலலிதாவின் ஆணவப் போக்கை அகற்ற இடைத்தேர்தலை பயன்படுத்துங்கள்.மேற்குத்தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட, சிறுபான்மை இனத்தை சேர்ந்த அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்தார். நியாயமாக, இடைத்தேர்தலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு 'சீட்' கொடுத்திருக்க வேண்டும்.இல்லையென்றால் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு 'சீட்' கொடுத்திருக்க வேண்டும். அப்படி கொடுத்திருந்தால், நிச்சயமாக தி.மு.க., சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தியிருக்க மாட்டோம்.தொகுதிக்கே சம்பந்தமில்லாத, பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஒருவருக்கு 'சீட்' கொடுத்துள்ளனர். அவருடன் இருந்த ஒருவரே அவர் மீது, போலீஸ் கமிஷனர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளார்.ஜெயிலில் இருக்க வேண்டிய அவர் அ.தி.மு.க., வேட்பாளராக வெளியில் உலாவுகிறார். வெளியில் இருந்து ஓட்டு கேட்க வேண்டிய நேருவோ, பொய்வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


