/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவனுக்கு ஆயுள்நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவனுக்கு ஆயுள்
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவனுக்கு ஆயுள்
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவனுக்கு ஆயுள்
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவனுக்கு ஆயுள்
ADDED : ஆக 20, 2011 11:50 PM
திருப்பூர்:நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றவனுக்கு, திருப்பூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கொடுவாய் கோட்டைமேட்டை சேர்ந்தவர் முருகேசன் (45); இவரது மனைவி ஜோதி (34);
கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். கொடுவாயை
அடுத்த, நாகலிங்கபுரத்தை சேர்ந்த மற்றொரு முருகேசன் (48). இவருக்கும்
ஜோதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர் முருகேசன்,
அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டுள்ளார்.கடந்த 2009ம் ஆண்டு அக். 5ம்தேதி
காலை, கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில்
ஆத்திரமடைந்த கணவர் முருகேசன், கனமான இரும்பு கொக்கியால் ஜோதியின் முகம்
மற்றும் கழுத்தில் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். ஜோதியின் தந்தை பழனி
கொடுத்த புகாரை வழக்கு பதிவு செய்த அவினாசிபாளையம் போலீசார், முருகேசனை
கைதுசெய்தனர். வழக்கு குறித்த விசாரணை திருப்பூர் விரைவு நீதிமன்றம்எண்-
5ல் நடந்து வந்தது; அரசு தரப்பு வக்கீல் வெங்கடாசலபதி வழக்கில் வாதாடினார்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைனவியை கொலைசெய்த முருகேசனுக்கு, நீதிபதி
இளங்கோவன் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


