ADDED : ஆக 01, 2011 10:51 PM
வால்பாறை : வால்பாறை வந்த வனத்துறை அமைச்சர் சின்கோனா டேன்டீ பகுதியில் கட்சி கொடியேற்றினார்.
வால்பாறை அடுத்துள்ள சின்கோனா டேன்டீ தேயிலை தோட்டத்தில் யானைகள் வழித்தடம் குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் நேற்றுமுன்தினம் வால்பாறை வந்தார். பின்னர் சின்கோனா முதல் பிரிவு, ரயான்(பத்தாம்பாத்தி) டிவிஷன் ஆகிய பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றினார். இதில் பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், அ.தி.மு.க., சட்டசபை தொகுதி செயலாளர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் உட்பட பலர் உடன் இருந்தனர்.