/உள்ளூர் செய்திகள்/சேலம்/பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து நூலகம் : மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து நூலகம் : மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்
பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து நூலகம் : மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்
பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து நூலகம் : மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்
பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து நூலகம் : மாணவர்கள், பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 29, 2011 01:07 AM
பனமரத்துப்பட்டி : கிராம பஞ்சாயத்துகளில், பல லட்சம் ரூபாய் செலவிட்டு
கட்டப்பட்ட நூலகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.
அறிவு வளர்ச்சிக்கு
உதவும் புத்தகம், பயன்பாடின்றி வீணாகி வருகிறது. கடந்த தி.மு.க.,
ஆட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராம
பஞ்சாயத்துகளுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், பஞ்சாயத்துகளில் நூலக கட்டிடம்
கட்டப்பட்டு, பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் புத்தகம் வாங்கப்பட்டு அதில்
வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியரை நூலகராக நியமித்து,
அவர்களுக்கு பஞ்., நிதியில் இருந்து மாதம் தோறும், 750 ரூபாய் சம்பளம்
வழங்க அரசு உத்தரவிட்டது. நூலகங்கள், காலை 8மணி முதல் 12மணி வரையிலும்,
மாலை 4மணி முதல் 7மணி வரையிலும் திறந்து வைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டது. இந்நிலையில், பனமரத்துப்பட்டி யூனியனில், 20 கிராம
பஞ்சாயத்துகளில் நூலகம் கட்டப்பட்டு, புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,
நூலகங்கள் திறக்கப்படாமல், மூடியே கிடக்கிறது. கிராமத்தில் உள்ள
பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் கிராம மக்களின் அறிவு வளர்ச்சிக்கு
உதவும் ஏராளமான புத்தகம், பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது,
கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, வாழகுட்டப்பட்டி உள்ளிட்ட சில பஞ்சாயத்துகளில் உள்ள
நூலகம் திறக்கப்படுகிறது. மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், குரால்நத்தம்,
பாரப்பட்டி, நெய்க்காரப்பட்டி, தும்பல்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான
பஞ்சாயத்துகளில் நூலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பல லட்சம்
ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் புத்தகங்கள் பயன்பாடின்றி
வீணாகி உள்ளது. சில நூலகங்களில், பணியாளர் இன்றியும், பல நூலகங்களுக்கு
பணியாளர் இருந்தும், திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால்,
கிராமத்தில் உள்ள மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து
பனமரத்துப்பட்டி யூனியன் பி.டி.ஓ., ஒருவர் கூறியதாவது: ஒருசில
பஞ்சாயத்துகளில், காலையிலும், சில பஞ்சாயத்துகளில் மாலை நேரத்திலும் நூலகம்
திறக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை நூலக பணியாளராக சேர்க்க
வேண்டும். குறைந்த சம்பளம் என்பதால், நூலக பணிக்கு வர, அவர்கள் தயக்கம்
காட்டுகின்றனர். அதனால், சில பஞ்சாயத்துகளில், நூலக பணியாளர்கள்
நியமிக்கப்படாமல் உள்ளது. நூலகங்களை நாள்தோறும் திறந்து வைக்க, பஞ்சாயத்து
தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், அனைத்து
நூலகங்களும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


